சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 11.50 லட்சம் வழிப்பறி புகார் – 7 பேர் கைது ரூ.10,11,400 ரொக்கப் பணம் மற்றும் இருசக்கர வாகனம் மீட்பு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கத்தியைக் காட்டி ரூ.11,50,000 பணம் வழிப்பறி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருக்கோஷ்டியூர் காவல் நிலைய குற்ற எண் 127/2026, பிரிவு 309 BNS-ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சரஸ்வதி என்ற சுமதி (45) என்பவரது புகாரின்படி, தோளுடையான் பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு ரூ.11,50,000 பணம் கடனாக வழங்கப்பட்டிருந்தது. இப்பணத்தை எடுத்துச் சென்றபோது, திருப்பத்தூர்-சிவகங்கை பைபாஸ் சாலையில் உள்ள ஏ.ஆர்.சி. விவசாயத் தோட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கத்தியைக் காட்டி பணத்தைப் பறித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வழக்கில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து 7 நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனீஸ் (27). சுண்டு @ நாச்சிமுத்து (23). புகழேந்தி (26). தினேஷ் (25). முத்தையா (55). முத்துலட்சுமி (25). மற்றும் பரமேஸ்வரி (32) ஆவர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.10,11,400 ரொக்கப் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மீட்கப்பட்டன. மேற்கொண்டு இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது எவ்வித சமரசமுமின்றி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















