சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலூர் கிராமத்தைச்சேர்ந்த பாண்டித்துரை (42, த/பெ.ஆறுமுகம் – A+ category HS Rowdy) என்பவருக்கும், அவரது மனைவி ராஜேஸ்வரி என்பவருக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை தொடர்பாக ராஜேஸ்வரி என்பவர் அவரது அம்மா வீட்டில் இருந்துள்ளார். அப்போது குடி போதையில் சென்ற பாண்டித்துரை அங்கு இருந்த தனது மனைவி ராஜேஸ்வரி, மாமியார் தனபாக்கியம் மற்றும் மாமியாரின் அம்மா ஆறுமுகம் ஆகியோரை அரிவாளால் வெட்டி காயப்படுத்தி மூவரையும் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிவகங்கையில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, வழக்கினை தொடர்ந்து கண்காணித்து நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பித்து உரிய சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்துள்ளார். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பானது சிவகங்கை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. இதில் மேற்கண்ட குற்றவாளியான பாண்டித்துரை என்பவருக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை கிடைப்பதற்கு, உறுதுணையாக இருந்த காவல் ஆய்வாளர் சிப்காட் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















