கோவை: கோவை மாநகரம், சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜி.சி.டி. அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 18.11.2026 அன்று ரூ.80,000 மதிப்புள்ள 8 மடிக்கணினிகளைத் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 8 மடிக்கணினிகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.




















