தேனி: தேனி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கௌதம் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு மேற்கொண்டு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




















