தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.இதன் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



















