தேனி: தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க மாவட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ட்ரோன் கேமரா காட்சிகளின் உதவியுடன் பதுங்கியிருந்த கைதிகளை காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். மொத்தம் 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகளைப் பிடிக்க காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















