கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், (27.10.2026) கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்குட்பட்ட குருபரப்பள்ளி மற்றும் பர்கூர் உட்கோட்டத்திற்குட்பட்ட போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் குருபரப்பள்ளி, போச்சம்பள்ளி பேருந்து நிலையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களிடம் குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















