கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், இன்று (27.10.2026) மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, ஊத்தங்கரை துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பர்கூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தனசேகரன், தேன்கனிக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில், அந்தந்த உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களிடம் குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















