கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தூர் சென்ட்ரல் வங்கி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போலீசார், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று நபர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 43 லாட்டரி சீட்டுகள், ₹900 ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், மூன்று பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















