கிருஷ்ணகிரி: காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இன்று (21.10.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூணிற்க்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி.எஸ். அனிதா அவர்கள் தலைமையில், காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்



















