இராமநாதபுரம்: பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் (21.10.2026) அன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 10 காவலர்களின் நினைவாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் டாக்டர் நெ. மணிவண்ணன், ஐபிஎஸ், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐபிஎஸ், மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 66 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.




















