திண்டுக்கல்: பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். காவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்ற நிலையில், 72 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















