திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே சீவல்சரகு பகுதியை சேர்த்து சரித்திர பதிவேடு குற்றவாளி பாண்டியன் (எ) அலெக்ஸ் பாண்டியன்(23). இவரின் பெயரில் போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி இவரின் புகைப்படத்துடன் அரிவாள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருப்பது போன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தது தொடர்பாக செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகநயினார் சார்பு ஆய்வாளர் சேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வாடிப்பட்டி, பொம்மன்பட்டியை சேர்ந்த மருதுபாண்டி மகன் ஸ்ரீரில்குமார்(20). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















