திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம்,பழவேற்காடு பகுதியில் செயல்பட்டு வரும் சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை சிபிஆர்டி டிரஸ்ட் வழியாகவும் சங்கர நேத்ராலயா சென்னை கண் மருத்துவமனை சமூகம் பணி மேற்கொள்ளும் சூர்யா ஒருங்கிணைப்பிலும் இரண்டு நாட்கள் கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முதல் நாள் ஜமீலாபாத் கிராமத்திலும் இரண்டாவது நாள் பழவேற்காடு மெயின் பஜாரில் அமைந்துள்ள சென்னை சமூக சேவை சங்க கட்டிடத்திலும் நடைபெற்றது. இந்த இரண்டு நாட்கள் கண் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 250 பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தார்கள். மேலும் இந்த 250 பயனாளிகளில் 126 பயனாளிகளுக்கு கண் கண்ணாடி பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் 16 பயனாளிகளுக்கு கண் புரை அகற்றும் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு கண்ணில் உள்ள அழுக்குகளை செய்வதற்கான பரிந்துரையும் செய்யப்பட்டு அதை வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களை பரிசோதனை செய்து மருத்துவ உதவி செய்வதாகவும் இந்த இரண்டு நாள் மருத்துவ முகாமில் பழவேற்காடு பகுதியில் உள்ள சுமார் அம்பேத்கர் நகர்,ஆண்டி குப்பம்,கோட்டைகுப்பம்,நடுவூர் மாதா குப்பம்,அம்பேத்கர் நகர்,குளத்து மேடு ஆகிய 11 கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை சமூகம் சார்ந்த கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஹாஜாமொய்தீன் ஏற்பாடு செய்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















