திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ம. மணியரசன் தலைமை வகித்தார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இளநிலை அலுவலர் பியூலா கஸ்தூரி, நேர்முக உதவியாளர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலையில் வகித்தனர் இதில் மீஞ்சூர் பொன்னேரி கும்மிடிப்பூண்டி சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியம் குறித்து மாதந்தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்த்தல், ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்சனைகள், மாற்றுத்திறனாளிக்கு தேவைப்படும் மருத்துவ வசதி, உதவி உபகரணங்கள் வழங்கக்கோரியும் சிறப்புமிக்க ஆலோசனைகளை வழங்கி தேவைகளை கேட்டறிந்து அதற்குண்டான மனுக்களை பெற்றுக் கொண்டனர் இதில் வி,கருணாகரன் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன்னேரி நகராட்சி நியமன கவுன்சிலர்,திருவள்ளூர் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட பொறுப்பாளர் ரவி, ராகவா மாற்றுத்திறனாளிகள் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் ரகோத்தமன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















