திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், விருவீடு பள்ளி மாணவர்கள் எழிலரசன், மிதுன், ஆத்விக், ராம் ஆகிய நால்வரும் வத்தலக்குண்டு ரோட்டில் நடந்து சென்றபோது ரூ.20 நோட்டு கீழே கிடந்தது. இதனை எடுத்த சிறுவர்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எஸ்.ஐ.பிரான்சிஸ் தீபாவிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் நேர்மையை பாராட்டிய எஸ்.ஐ., அவர்களுக்கு நோட்டு, பேனா, கேக் ஆகியவற்றை வழங்கினார். வருங்காலங்களிலும் இதேபோல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















