திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள் மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.



















