கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர, கிருஷ்ணகிரி தாலுகா மற்றும் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சேலம் ரோடு அம்மன் நகர் குற்றவாளியின் வீட்டின் அருகே, புதிய பாஞ்சாலியூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள குற்றவாளியின் பாஸ்ட் புட் கடையில், மலையாண்டப்பள்ளி புதூர் கிராமம் குற்றவாளியின் ஓட்டல் கடையின் பின்புறம் மற்றும் புதிய மலையாண்டப்பள்ளி மன்னன் நகர் கிராமம் குற்றவாளியின் பெட்டி கடையின் பின்புறம் ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்ததில் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் இருந்தது. மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து ஐந்து குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















