கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நார்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அம்மு என்பவர், அவரது கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், மேலும் 15 மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவரது குழந்தைகளைப் படிக்க வைத்து வருவதாகவும், இந்நிலையில்,(15.11.2026) ஆம் தேதி அன்று மாடுகளை மேய்த்துவிட்டு, வீட்டின் அருகே கட்டிவைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளதாகவும், மறுநாள் (16.11.2026) ஆம் தேதி அன்று அதிகாலை 04.00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, கட்டி வைக்கப்பட்டிருந்த 15 மாடுகளில் ஒரு மாடு காணவில்லை என அருகில் இருந்தவர்களிடமும், அக்கம் பக்கம் கேட்டும், தேடிபார்த்தும் கிடைக்கவில்லை என அம்மு (16.11.2026) ஆம் தேதி 09.00 மணிக்கு காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து மாட்டை திருடிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















