கிருஷ்ணகிரி: சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1,08,400 மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிமாநிலத்திலிருந்து குட்கா பொருட்களைக் கடத்தி வந்த இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்



















