சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்றியம், சிறுவத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பப்பனி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த கண்மாயைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான டாக்டர் டி.கே. பிரபு அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















