இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 1567 சரித்திர பதிவேடு குற்றவாளிகளில் மிக தீவிர குற்றவாளிகள் 114 நபர்கள் உள்ளனர். மேற்படி நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று கண்காணித்து அவர்களது குடும்பத்தினரிடம், அறிவுரைகள் வழங்கி மேற்படி நபர்கள் எந்தவித குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், நல்வழியில் வாழ வேண்டும் என்றும், குடும்பத்தினரின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் நகர் காவல் நிலைய மற்றும் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேரில் நடைரோந்து மேற்கொண்டு மேற்படி சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















