திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. ரூபி அவர்கள் தலைமையில், ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைபேசி பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, கல்வியின் முக்கியத்துவம் குழந்தைகள் மீதான துன்புறுத்தல், குழந்தைத் திருமணம், படிப்பின் முக்கியத்துவம், செல்போன் பயன்படுத்தும் முறை, போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் உதவி எண் 1091, குழந்தைகள் உதவி எண் 1098, இணையவழி குற்றப் புகார் எண் 1930 மற்றும் காவல் அவசர உதவி எண் 100 ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.




















