திண்டுக்கல்: Instagram, Facebook, WhatsApp, YouTube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது, இளைஞர்களைத் தவறான பாதைக்கு தூண்டுவது போன்ற செயல்கள் கடுமையான குற்றங்களாகும். திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் மற்றும் தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது ஆயுதச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாரபட்சமின்றி உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















