திண்டுக்கல்: திண்டுக்கல், திருமலைசாமிபுரத்தை சேர்ந்த முத்துக்குமார்(39) இவரது மனைவி லாவண்யா(23). இந்நிலையில் லாவண்யாவுக்கும், எமக்கலாபுரத்தைச் சேர்ந்த துளசிமணி(28). என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது இதனை முத்துக்குமார் கண்டித்ததால் லாவண்யா கள்ளக்காதலன் துளசிமணி மற்றும் அவரது நண்பர் எமக்கலாபுரத்தை சேர்ந்த அழகுசின்னு(43). ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துக்குமாரை கழுத்தை நெரித்து மேலும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP. கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா காவலர்கள் காங்கேயன், சுரேஷ், மணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்ய முயற்சி செய்த லாவண்யா, துளசிமணி, அழகுசின்னு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















