திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் ஆலயத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி -20-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது கோவில் புனரமைப்பு பணிகளுக்காக எடுத்து வைக்கப்பட்ட கருடாழ்வார் சிலை, அம்மன் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மீண்டும் கோவிலில் வைக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து. இன்று ராஜாவை திண்டுக்கல் சிலை திருட்டு தடுப்பு விரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதனைத்தொடர்ந்து ராஜா மாயமான சிலைகள் குறித்த புகைப்பட ஆதாரங்கள் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















