திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அடைக்கனுாரை சேர்ந்த விவசாயிகள் வெள்ளைச்சாமி(45). மற்றும் சின்னக்கருப்பன் (51). இருவருக்கும் தோட்டத்து பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது தோட்டம் அருகே காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது தோட்டத்து வரப்பில் நின்று கொண்டிருந்த வெள்ளைச்சாமியிடம் சின்னக்கருப்பன், அவரது உறவினர்கள் சின்னையா(35), ஹரிபிரகாஷ்(19). ஆகியோர் தகராறில் ஈடுபட்டு அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் சின்னக்கருப்பன், சின்னையா, ஹரிபிரசாத் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















