கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அப்பேருந்தில் பயணம் செய்த நபரிடம் சுமார் 10 kg கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 10 kg கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















