கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலுக்கொண்டப்பள்ளி – சின்னமேனகரம் சிவன் கோயில் அருகிலும், ஓசூர் – தளி சாலை புதுப்பாலம் அருகிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதியின்றி சுமார் 10 யூனிட் எம்-சாண்ட் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















