கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.எஸ். திம்மசந்திரம் பேருந்து நிலையம் அருகே வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில், உரிய அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 6 யூனிட் எம்-சாண்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்த அதிகாரிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு


















