மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படியும், மதுரை மாநகர காவல் ஆணையரின் மேற்பார்வையிலும், (09.11.2026) அன்று மதுரை மாநகரின் அனைத்து காவல் சரகங்களிலும் காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் நடைபயண ரோந்து மேற்கொண்டனர். அப்போது, பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் குறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்ததுடன், குற்றத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


















