சென்னை: தீபாவளித் திருநாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான இல்லத்திற்குச் சென்று, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். அங்குள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கி, தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இதே போல், சென்னை பெருநகரம் முழுவதும் உள்ள பல்வேறு காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்ற சென்னை பெருநகர காவல்துறையினர், அங்குள்ளவர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி, அவர்களுடன் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து தீபாவளித் திருநாளைக் கொண்டாடினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா


















