சென்னை: தீபாவளித் திருநாளை முன்னிட்டு, மடிப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள், அக்ஷயா நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்திற்குச் சென்று அங்குள்ள முதியவர்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கினர். மேலும், அவர்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா


















