சென்னை: சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் கடந்த (14.10.2026) அன்று அஜய் (21) என்பவரை ஆட்டோவில் வந்த நான்கு நபர்கள் வழிமறித்துத் தாக்கி கடத்திச் சென்றனர். பின்னர், அவரைக் கடன் செயலி மூலம் கடன் பெறச் செய்து, ஏ.டி.எம். மையத்தில் ₹9,500 பணத்தைப் பறித்ததுடன், அவரது செல்போனையும் பறித்துச் சென்றனர். இது குறித்து T-14 பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் Cr. No. 489/2026, BNS பிரிவு 309(2)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட சையத் அபுதாகிர் என்ற அபு (18), பிரகாஷ் ராஜ் (22), பூபாலன் (23) மற்றும் சஞ்சய் (21) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ராஜ் கமல்



















