திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்டம், ஆம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே. நகர் சந்திப்பில் (21.10.2026) வாணியம்பாடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது (TVS) இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை எடுத்துச் சென்ற தும்பேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (38). என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில் அவர் புதுக்கோயில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டில்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 107 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், பாண்டியனை கைது செய்து ஆம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















