திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் இன்று (19.10.2026) வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகளைப் பார்வையிட்டு, அவற்றின் பராமரிப்பு மற்றும் அலுவலகப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாகவும், புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் குறைகளைக் கவனமாகக் கேட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும், பொறுப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.




















