கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பாலக்கோடு சாலையில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 30 கிலோ கஞ்சா, 2 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பண்ணிஹள்ளி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் அமர்நாத் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்குரிய முறையில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ராஜ்குமார் (32), செல்வராஜ் (19), கோழி என்கிற நந்தகுமார் (30), உதயசூரியன் (30) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா கார், ஹோண்டா அமேஸ் கார் மற்றும் 2 டியோ ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















