கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜுஜுவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 80,880/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















