கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனகோடி கிராமத்தில் ஆனந்த் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இந்நிலையில் ஆனந்த் சாமல்பட்டி கிராமத்தில் உள்ள கந்தன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக மூத்த தொழில்நுட்ப வல்லுநராகப் (Senior Technician) பணியாற்றி வருவதாகவும், மேலும் இந்நிறுவனத்தில் மூன்று பாதுகாவலர்கள் மாலை சுமார் 6.00 மணி முதல் மறுநாள் காலை சுமார் 6.00 மணி வரை வேலை செய்து வருவதாகவும், மேலும், இந்த நிறுவனத்தில் ஆறு இடி தாங்கிகள் உள்ளதாகவும், இந்த ஆறு இடிதாங்கிகளில் மின்னல் தாக்கத்தின்போது ஏற்படும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காகக் காப்பர் ஒயர்களால் ஆன கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,
இந்நிலையில், கடந்த (15.10.2026) அன்று அதிகாலை சுமார் 04.30 மணியளவில், இரவுப் பணியில் இருந்த பாதுகாவலர்கள், சுமார் ரூ.1,00,000/- மதிப்புள்ள காப்பர் ஒயர்களைத் திருட முயன்ற குற்றவாளியை கண்டதும், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குற்றவாளியை பிடித்து வைத்து கொண்டு சீனியர் டெக்னீசனாக பணியாற்றி வரும் ஆனந்த் என்பவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, பின்னர் ஆனந்த் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போச்சம்பள்ளி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, பின்னர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















