சேலம்: இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு தயாரிப்பு இடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், பட்டாசுகளின் இருப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.




















