கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 1,96,664/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ₹ 4,320/- ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















