திண்டுக்கல்: திண்டுக்கல், தருமத்துப்பட்டி பகுதியில் கடந்த 26-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் தங்ககுருசாமி தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக்ராஜன், மோரிஸ்ஜோசப்ராஜ், காங்குமணி ஆகியோர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கோயம்புத்தூரை சேர்ந்த முகமதுஅலி, ஜெகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















