திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோப்பம்பட்டி பிரிவு பகுதியில், கோப்பம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிங்கராயர் (65). இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாகச் சென்ற கார், சிங்கராயர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகு றித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















