கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தேவர் பெட்டா கிராமத்தில் உள்ள குற்றவாளியின் சிமெண்ட் குடோனில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் சிமெண்ட் குடோனிற்கு சென்று சோதனை செய்தபோது உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி ஒன்று வைத்திருந்தார். நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















