கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாஞ்சாலியூர் – தாசிரிப்பள்ளி ரோடு, காந்தி சிலை அருகே வருவாய் ஆய்வாளர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 11/4 யூனிட் உடைக்கற்கள் இருந்தது. அனுமதியின்றி உடைகற்கள் கடத்திய குற்றவாளியை கைது செய்து உடைகற்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















