மதுரை: மதுரை, அலங்காநல்லூர் அருகே, கொண்டையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுவதாக வந்த புகார் அடிப்படையில்
மதுரை மாவட்ட எஸ்.பி.தேவநாதன் ஆய்வு கனிமவளத்துறை அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்படுவதாகவும், இரவு பகலாக பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தும், கற்கள் வெட்டி எடுப்பதாகவும், அதனை லாரிகளில் கொண்டு செல்ல நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கனிம வளங்களை கடத்தி செல்வதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் செல்ல வழியில்லாமல் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் ,
அரசுக்கு பல கோடி வருமான இழப்பு ஏற்படுத்தி குவாரி உரிமையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருவதாகவும் புகார் எழுந்தது, தட்டி கேட்ட பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்கள் எழுந்தது,
இந்த நிலையில், மதுரை மாவட்ட எஸ்.பி. தேவநாதன் நேரில் கல்குவாரிக்கு வந்து கற்கள் வெட்டி எடுக்கும் பகுதிகளையும் மலை பகுதி குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது, குவாரிக்கு எஸ்பி ஆய்வுக்கு வருவது குறித்த தகவல் அறிந்து குவாரியில் உரிமையாளர்கள், பணியாளர்கள் என யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் எஸ்பி தேவநாதன் ஆய்வு செய்தார் மாவட்ட காவல் துறைக்கு குவாரி குறித்து தகவல்கள் தெரிவிக்க வேண்டிய வருவாய் துறையினர் அங்கு இல்லாதது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ் பி:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியில் இரவு பகலாக சட்டவிரோதமாக செயல்படுவதாக தகவல் வெளிவந்ததால் நேரில் ஆய்வு செய்து கல்குவாரி உரிமையாளர்களிடம் ஆவணங்களை சரிபார்க்கவும், உள்ளூர் காவல் நிலையத்திலும் குவாரி குறித்த ஆவணங்களை சரிபார்க்க தற்போது வந்ததாகவும், இதே போல் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமோ, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, காவல்துறை எஸ்.பி அலுவலகத்திலோ, என்னுடைய வாட்சப் நம்பருக்கோ, 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறினார்.
ஆவணங்களை சரிபார்க்க வந்ததாக கூறிய மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வுக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களோ பணியாளர்களோ வருவாய்த் துறையினரோ இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும், சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் கூறிய கனிம
வளதுறை அமைச்சர் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும் என்று கூறிய நிலையில் தற்போது மாவட்ட எஸ்பி ஆய்வு செய்த குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகிறதா என, அமைச்சர் தலைமையில் ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என,
இந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















