திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையச்சரகம் சம்பந்தப்பட்ட பகுதியில் கர்நாடகா மாநிலத்திலிருந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்து வாகனத்தில் மாற்றிக் கொண்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது உத்தரவின் பேரில், திண்டுக்கல் ஊரக உட்கோட்ட பொறுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களின் மேற்பார்வையில் நத்தம் காவல் ஆய்வாளர் திரு. பொன்குணசேகரன், சார்பு ஆய்வாளர் திரு. அபினேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது சத்தியராஜ் என்பவரது தேங்காய்குடோன் அருகே ஒரு பொலிரோ பிக்கப் வேனிலிருந்து ஸ்விப்ட் டிசையர் மற்றும் ஹோண்டா கார்களில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மாற்றிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்ட உடன் ஓட முயற்சி செய்தனர். அவர்களில்
1) மரியசூசை (54). த.பெ. மைக்கேல், பெங்களூர் 2) நாச்சிமுத்து (32). த.பெ. ராதாகிருஷ்ணன், சர்வேயர் நகர், மாலப்பட்டி ஆகிய இருவரும் பிடிபட்டனர். மற்ற மூன்று பேர் தலைமறைவாகிவிட்டனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் கர்நாடகா மாநிலத்திலிருந்து பொலிரோ பிக்கப் வேனில் 498 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்து கார்களில் மாற்றிக்கொண்ட விபரம் தெரியவர, இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 498 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பிக்கப்வேன் மற்றும் இரண்டு கார்கள் மற்றும் பணம் ரூபாய். 16,400/- பறிமுதல் செய்யப்பட்டு நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி குற்றவாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுபிக்ஷா (22). க.பெ. தீபக் கோபால்பட்டி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகளான
1) தீபக் த.பெ. சேகர், இந்திராநகர், கோபால்பட்டி மற்றும்
2) சத்தியராஜ், த.பெ. சின்னச்சாமி ஆகியோரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















