சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த குற்றவாளி நிரேஷ்குமார் கடந்த 3ம் தேதி மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பெண் ஒருவருடன் இருந்தபோது மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. காயமடைந்த நிரேஷ்குமார் சிகிச்சை பெற்று அளித்த புகாரில் மீஞ்சூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் அத்திப்பட்டு சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சங்கர் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நிரேஷ்குமாரை வெட்டியது தெரிய வந்தது.
இந்த வழக்கில் விக்னேஷ், (28). என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து எஞ்சியவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் பவானி, (27). கிஷோர் (28). சங்கர், (28). ராகுல்டேவிட், (27). ஆகியோரை கைது செய்தனர். காவல்துறை கைது செய்த போது தப்பியோடியதில் அத்திப்பட்டு மேம்பாலத்தில் கீழே விழுந்ததில் சங்கர், ராகுல்டேவிட் ஆகிய இருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டது. கைததான குற்றவாளிகளிடம் இருந்து 4கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4பேரையும் மீஞ்சூர் போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















