திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக சுமார் 300க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அரங்கம் குப்பம் பசுபதி த/பெ ஜலேந்திரன் என்பவருக்கு சொந்தமான சுசிகிபோட் மற்றும் இஞ்சின் மீது மின்னல் விழுந்ததில் படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மேலும் தீப்பிடித்து எறிந்த படகை கிராம மக்கள் அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் பொன்னேரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். சுமார் 10 லட்சம் மதிப்பிலான படகு எஞ்சின் இதனால் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கிராம மக்கள் திருப்பாலைவனம் காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















