திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் ஹரிஹரன் பஜார், இரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செங்கல்பட்டு மண்டல நகராட்சி இயக்குனர் மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர் நளாயினி அவர்களின் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ஆ.சாமுவேல் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்ப பட்டது. ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் கண்டறியப்பட்டது. சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொன்னேரி நகராட்சி பகுதிகளில் உணவகங்கள் மற்றும் கடைகளில் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது அவ்வாறு விற்பனை செய்வதோ வைத்திருப்பது பயன்படுத்துவதோ கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அபராத கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் வரை அபராத விதிக்கப்படும் எனவே பொதுமக்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















